Seed Certification
விதை சுத்திகரிப்பு :: விதைச் சுத்திகரிப்பு தளங்கள்
விதைச் சுத்திகரிப்பு தளங்கள்

அங்கீகாரம் பெறும் வழிமுறைகள்
     
விதைச் சுத்திகரிப்பானது விதையின் புற அமைப்புக்களான, விதை அளவு, நீளம், எடை, வடிவம், மேற்புற நய அமைப்பு, நிறம், திரவ ஒட்டும் தன்மை மற்றும் மின் கடத்தும் திறன் போன்றவற்றைக் கொண்டு செயல்படுகின்றது. சுத்திகரிப்பின் முதல் நிலையில், மேல் தோல் நீக்குதல், முடி நீக்குதல், உமி நீக்குதல், ஓடு நீக்குதல் போன்ற பணிகளின் பின்னர் தரம் பிரித்தல் மற்றும் தூய்மைப்படுத்துதல் போன்றவை செய்யப்படும். (நிலைப்படுத்துதல் மற்றும் முன் தூய்மைப்படுத்துதல்)

இரண்டாம் நிலையில் தேவையற்ற பொருட்கள், களை விதைகள், பிறப் பயிர் மற்றும் உடைந்த விதைகள், பயிர் விதைகளை விடப் பெரியதாகவோ, சிறியதாகவோ உள்ளவை போன்றவை பிரித்தெடுக்கப்படும்.

இறுதி நிலையில் (பிரித்தல் மற்றும் தரம் மேம்படுத்துதல்) தேவையற்ற பொருட்கள் விதையிலிருந்து பிரிக்கப்படும்.

சுத்திகரிப்பு சாதனங்கள்

சில சுத்திகரிப்பு சாதனங்களின் வடிவமைப்புகளும் அவற்றின் திறன்களும்

1. என்ஸ்கோ சூப்பர  - 300கிலோ / 1 மணி நேரம்
2. கிரிபென் வடிவமை - 250-300 கிலோ / 1 மணி நேரம்
3. ஜீனியர் பெட்கஸ் - 500 கிலோ / 1 மணி நேரம்
4. ஜெயின்டு பெட்கஸ்  - 1000-1200கிலோ / 1 மணி நேரம்
5. தெர்மேக்ஸ் - 1000கிலோ / 1 மணி நேரம்
6. ஓசா   - 800 கிலோ / 1 மணி நேரம்
7. அக்ரோசா - 500 கிலோ / 1 மணி நேரம்
8. டூகாஸ் - 300 கிலோ / 1 மணி நேரம்

சுத்திகரிப்பு நிலையங்கள் அங்கீகாரம்
     
கீழ்க்கண்ட ஐந்து வகையாக சுத்திகரிப்பு நிலையங்களுக்கு விதைச்சான்றிதழ் இயக்குநரால் சான்றிதழ் பணிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது

  1. விதைச் சுத்திகரிப்பு மற்றும் சான்றட்டை நிலையம்
  2. அரைவை நிலையம்
  3. அரைவை, சுத்திகரிப்பு மற்றும் சான்றட்டை நிலையம்
  4. பஞ்சு நீக்கும் நிலையம்
  5. தூய்மைப்படுத்தும் மற்றும் சான்றட்டை நிலையம்
Updated On: Jan, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam